/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து வெற்றி: லிவிங்ஸ்டன் சதம்
/
இங்கிலாந்து வெற்றி: லிவிங்ஸ்டன் சதம்
ADDED : நவ 03, 2024 09:52 PM

ஆன்டிகுவா: கேப்டன் லிவிங்ஸ்டன் சதம் விளாச, இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேசி கார்டி (71), கேப்டன் ஷாய் ஹோப் (117), ஷெர்பேன் ரூதர்போர்டு (54) நம்பிக்கை அளித்தனர். 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 328 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (59), ஜேக்கப் பெத்தேல் (55) கைகொடுத்தனர். கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் சதம் கடந்தார். சாம் கர்ரான் அரைசதம் விளாசினார். சாம் கர்ரான் (52) அவுட்டானார். இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 329 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டன் (124) அவுட்டாகாமல் இருந்தார்.தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.