/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து
/
கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து
கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து
கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து
ADDED : நவ 18, 2024 10:06 PM

செயின்ட் லுாசியா: ஐந்தாவது 'டி-20' போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 44 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்ததால் போட்டியை பாதியில் ரத்து செய்யப்பட்டது. தொடர் நாயகன் விருதை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் (9 விக்.,) வென்றார்.