/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது இங்கிலாந்து: பெண்கள் 'டி-20'யில் அபாரம்
/
கோப்பை வென்றது இங்கிலாந்து: பெண்கள் 'டி-20'யில் அபாரம்
கோப்பை வென்றது இங்கிலாந்து: பெண்கள் 'டி-20'யில் அபாரம்
கோப்பை வென்றது இங்கிலாந்து: பெண்கள் 'டி-20'யில் அபாரம்
ADDED : மார் 29, 2024 09:25 PM

வெலிங்டன்,: நியூசிலாந்துக்கு எதிரான 5வது 'டி-20' போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
நியூசிலாந்து சென்ற இங்கிலாந்து பெண்கள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. வெலிங்டனில் 5வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு பெர்னாடின் (1), அமேலியா கெர் (5), சுசி பேட்ஸ் (11), மேடி கிரீன் (10) ஏமாற்றினர். பின் இணைந்த புரூக் ஹாலிடே, இசபெல்லா ஜோடி நம்பிக்கை தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது ஹாலிடே (33) அவுட்டானார். இசபெல்லா அரைசதம் விளாசினார்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்தது. இசபெல்லா (51), ஜெஸ் கெர் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஹீதர் நைட் (35), நாட் சிவர்-புருன்ட் (31), ஆலிஸ் கேப்சி (25), டேனி வியாட் (21) கைகொடுத்தனர். நியூசிலாந்து சார்பில் அமேலியா 3 விக்கெட் வீழ்த்தினார்.

