/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து வீராங்கனை சாதனை: அதிவேக 100 விக்கெட் சாய்த்து
/
இங்கிலாந்து வீராங்கனை சாதனை: அதிவேக 100 விக்கெட் சாய்த்து
இங்கிலாந்து வீராங்கனை சாதனை: அதிவேக 100 விக்கெட் சாய்த்து
இங்கிலாந்து வீராங்கனை சாதனை: அதிவேக 100 விக்கெட் சாய்த்து
ADDED : மே 30, 2024 10:41 PM

செம்ஸ்போர்டு: இங்கிலாந்தின் எக்லெஸ்டோன், ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் சாய்த்த வீராங்கனையானார்.
இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
'சுழலில்' அசத்திய இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், 6 விக்கெட் சாய்த்து தொடர் நாயகி விருது வென்றார்.
செம்ஸ்போர்டில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய எக்லெஸ்டோன், ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்சில் 100 விக்கெட் கைப்பற்றிய வீராங்கனையானார். இதுவரை 63 இன்னிங்சில், 101 விக்கெட் சாய்த்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் 64 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டியது சாதனையாக இருந்தது.