தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்து இரண்டாவது வெற்றி: 108 ரன்னில் சுருண்டது ஆஸி.,

இங்கிலாந்து இரண்டாவது வெற்றி: 108 ரன்னில் சுருண்டது ஆஸி.,

இங்கிலாந்து இரண்டாவது வெற்றி: 108 ரன்னில் சுருண்டது ஆஸி.,


ADDED : நவ 28, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிஸ்பேன்: மூன்றாவது ‘டி–20’ போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1–1 என சமனில் இருந்தது. மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

சபாஷ் ஓவர்டன்



ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (11), மெக்குர்க் (22) ஜோடி துவக்கம் தந்தது. அடுத்து வந்த சாம் ஹார்பெர் 14 பந்தில் 26 ரன் எடுத்தார். நிகில் சவுத்ரி (19), டிம் டேவிட் (6), ஜோயல் (3) என ‘மிடில் ஆர்டரில்’ யாரும் நிலைக்கவில்லை.

பின் வரிசையில் மிட்செல் ஓவென் (17), டிவார்ஷியஸ் (0), ஆடம் ஜாம்பாவும் (3) அணியை கைவிட்டனர்.

ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் ஜமை ஓவர்டன், 5 விக்கெட் சாய்த்தார்.

டொனால்டு விளாசல்



எளிய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (5), டொனால்டு ஜோடி துவக்கம் தந்தது. டொனால்டு 13 பந்தில் 32 ரன் விளாசினார். கேப்டன் ஹாரி புரூக் (9) நிலைக்கவில்லை. இங்கிலாந்து 6 ஓவரில் 53/3 ரன் எடுத்திருந்த போது, மழையால் போட்டி இரு முறை நிறுத்தப்பட்டது. பின் 16 ஓவரில் 93 ரன் என, இலக்கு மாற்றப்பட்டது.

டாம் பான்டன் (10), ஜோர்டான் காக்ஸ் (33) ஜோடி அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. இங்கிலாந்து அணி 8.5 ஓவரில் 93/3 ரன் எடுத்து, ‘டக் வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன்’ விதிப்படி, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரில் 2–1 என முன்னிலை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us