/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி: 69 ரன்னுக்கு சுருண்டது தென் ஆப்ரிக்கா
/
இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி: 69 ரன்னுக்கு சுருண்டது தென் ஆப்ரிக்கா
இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி: 69 ரன்னுக்கு சுருண்டது தென் ஆப்ரிக்கா
இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி: 69 ரன்னுக்கு சுருண்டது தென் ஆப்ரிக்கா
ADDED : அக் 03, 2025 10:48 PM

கவுகாத்தி: உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய இங்கிலாந்து பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா 69 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் நாட் சிவர்-புருன்ட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு லின்சி ஸ்மித் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் லாரா வோல்வார்ட் (5), தஸ்மின் பிரிட்ஸ் (5), மரிஜானே காப் (4) வெளியேறினர். சிவர்-புருன்ட் பந்தில் அன்னேகே போஷ் (6), டிரையான் (2) அவுட்டாகினர். சோபி எக்லெஸ்டோன் 'சுழலில்' நாடின் டி கிளார்க் (3) சிக்கினார். சார்லி டீன் பந்தில் மசபடா கிளாஸ் (3), மிலாபா (3) போல்டாகினர். சினாலோ ஜாப்டா (22) ஆறுதல் தந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 20.4 ஓவரில் 69 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அயபோங்கா (6) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் லின்சி 3, சிவர்-புருன்ட், எக்லெஸ்டோன், டீன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமான்ட் (21*), அமி ஜோன்ஸ் (40*) ஜோடி கைகொடுத்தது. இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இது குறைவு
69 ரன்னுக்கு சுருண்ட தென் ஆப்ரிக்கா, ஒருநாள் போட்டி அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 77 ரன்னில் (2013, இடம்: கட்டாக்) 'ஆல்-அவுட்' ஆனது.