தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : அக் 07, 2026 05:21 AM

ADDED : அக் 06, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 05:21 AM ADDED : அக் 06, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவர் அகார்கர் பதவிக்காலம் (அக். 4) முடிந்தது. பதவி நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், புதிய தலைவருக்கான விண்ணப்பங்களை, அக். 14ம் தேதிக்குள் அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

* டபிள்யு.டி.டி., சீனா ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் ‘ரவுண்டு–32’ சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, 5–11, 11–9, 6–11, 5–11 என்ற கணக்கில் உலகின் ‘நம்பர்–2’, சீனாவின் வாங் மன்யுவிடம் தோல்வியடைந்தார்.

* பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் டில்லி அணியின் பயிற்சியாளராக, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டார்.

* மும்பை ரஞ்சி கோப்பை அணியின் துணைக் கேப்டனாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டார். பயிற்சி முகாமில் பங்கேற்காத சூர்யகுமார் யாதவ், அணியில் சேர்க்கப்படவில்லை. சித்தேஷ் கேப்டனாக உள்ளார்.

* ஆர்டிக் ஓபன் பாட்மின்டன் தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ரவுனக் சவுகான், 18–21, 21–17, 21–19 என இஸ்ரேலின் டேனிலை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

* பாகிஸ்தான் ‘டி–20’ அணியின் புதிய கேப்டனாக, சாஹிப்சதா பர்ஹான் தேர்வு செய்யப்பட்டார்.

* புதுச்சேரியில் நடந்த அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி (139/7******), **** ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய ‘ஏ’ (274) அணியிடம் தோல்வியடைந்தது. *******

* பிரிமியர் லீக் தொடருக்கான (2027) வீரர்கள் ஏலம், வரும் டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது. இதற்கான வீரர்களை தக்கவைக்க, நவ. 15 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us