/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தந்தை கொதிப்பு... ஜடேஜா மறுப்பு
/
தந்தை கொதிப்பு... ஜடேஜா மறுப்பு
ADDED : பிப் 09, 2024 10:37 PM

ஆமதாபாத்: மனைவி மீது கூறிய புகாருக்கு ரவிந்திர ஜடேஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா. 2016ல் ரிவாபாவை திருமணம் செய்தார். 2022ல் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ., சார்பில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வென்றார். இவர் மீது ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் புகார் கூறியுள்ளார்.
அனிருத்சிங் அளித்த பேட்டியில், ''ஜடேஜாவின் மனைவி ரிவாபா எங்களது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார். திருமணமான 3 மாதத்தில் அனைத்து சொத்துகளையும் தனது பெயருக்கு மாற்றினார். தற்போது ஜாம்நகரில் தனியாக வசிக்கிறேன். மனைவியுடன் ஜடேஜா வேறு ஒரு மாளிகையில் வசிக்கிறார்.
வறுமையான காலத்தில் மிகுந்த சிரமப்பட்டு அவரை கிரிக்கெட் வீரராக்கினேன். ரிவாபா என்ன மந்திரம் செய்தாரோ தெரியவில்லை... ஒரே ஊரில் வசித்த போதும் ஜடேஜா என்னுடன் பேசுவதில்லை. என்னை சந்திப்பதும் இல்லை,''என்றார்.
இதனை மறுத்த ஜடேஜா கூறுகையில், ''எனது தந்தை சொன்ன விஷயங்கள் உண்மையல்ல. என் மனைவியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றுள்ளார். அது சித்தரிக்கப்பட்ட பேட்டி என்பதால், யாரும் கண்டுகொள்ள வேண்டாம்,''என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது தொடைப்பகுதியில் காயம் அடைந்த ஜடேஜா தேறி வருகிறார். எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற காத்திருக்கிறார். இந்தச் சூழலில் தந்தை எழுப்பிய புகார், அவரது தனிப்பட்ட வாழ்வில் புயலை கிளப்பியுள்ளது.

