ADDED : ஜூலை 17, 2026 11:06 PM

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்.
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் 89. கடந்த 1936ல் (ஜூலை 28) பார்படாசில் பிறந்தார். 'ஆல்-ரவுண்டரான' கார்பீல்ட் சோபர்ஸ், 1954ல் கிங்ஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடைசியாக, 1974ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய இவர், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் (1973, எதிர்: இங்கிலாந்து, லீட்ஸ்) பங்கேற்றார். முதல் தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடிய இவர், 6 பந்தில், 6 சிக்சர் (1968, எதிர்: கிளாமார்கன்) விளாசிய முதல் வீரரானார். மொத்தம் 93 டெஸ்ட் (8032 ரன், 26 சதம், 235 விக்கெட்), ஒரு ஒருநாள் போட்டியில் (1 விக்கெட்) விளையாடினார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார். இதனை, அவரது மகன் டேனியல் உறுதி செய்தார்.
