/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கிரஹாம் தோர்ப் காலமானார்: இங்கிலாந்து கிரிக்கெட்டில் சோகம்
/
கிரஹாம் தோர்ப் காலமானார்: இங்கிலாந்து கிரிக்கெட்டில் சோகம்
கிரஹாம் தோர்ப் காலமானார்: இங்கிலாந்து கிரிக்கெட்டில் சோகம்
கிரஹாம் தோர்ப் காலமானார்: இங்கிலாந்து கிரிக்கெட்டில் சோகம்
ADDED : ஆக 05, 2024 10:29 PM

லண்டன், ஆக. 6-
இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப், உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் 55. இடது கை 'மிடில்-ஆர்டர் பேட்டரான' இவர், 1993ல் (மே 19) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்தார். பின், நாட்டிங்காம் டெஸ்டில் (1993, ஜூலை 1-6, எதிர்: ஆஸி.,) அறிமுகமானார்.
கடைசியாக 2005ல் (ஜூன் 3-5) வங்கதேசத்துக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் நடந்த டெஸ்டில் பங்கேற்றார். உள்ளூர் போட்டியில் சர்ரே அணிக்காக (1988-2005) விளையாடினார். 2005ல் (ஜூலை 22) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோர்ப், 100 டெஸ்ட் (6744 ரன், 16 சதம்), 82 ஒருநாள் (2380 ரன், 21 அரைசதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர இவர், 341 முதல்தரம் (21,937 ரன்), 354 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் (10,871) விளையாடி உள்ளார். இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.
கடந்த 2022ல் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட போது கிரஹாம் தோர்ப், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் முழு விபரம் தெரியவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு, அமண்டா என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.