/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
குஜராத் அணி அசத்தல் வெற்றி: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில்
/
குஜராத் அணி அசத்தல் வெற்றி: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில்
குஜராத் அணி அசத்தல் வெற்றி: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில்
குஜராத் அணி அசத்தல் வெற்றி: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில்
UPDATED : பிப் 16, 2025 11:05 PM
ADDED : பிப் 16, 2025 10:38 PM

வதோதரா: பிரிமியர் லீக் போட்டியில் குஜராத் பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில், பெண்களுக்கான பிரிமியர் லீக் 3வது சீசன் நடக்கிறது. வதோதராவில் நடந்த லீக் போட்டியில் குஜராத், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
உ.பி., அணிக்கு கிரண் நவ்கிரே (15) சுமாரான துவக்கம் தந்தார். உமா செத்ரி (24), கேப்டன் தீப்தி சர்மா (39) ஓரளவு கைகொடுத்தனர். தஹ்லியா மெக்ராத் (0), கிரேஸ் ஹாரிஸ் (4) ஏமாற்றினர். ஸ்வேதா (16) நிலைக்கவில்லை. உ.பி., அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. அலானா கிங் (19) அவுட்டாகாமல் இருந்தார். குஜராத் சார்பில் பிரியா 3, டீன்டிரா டாட்டின், ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு லாரா வோல்வார்ட் (22) நல்ல துவக்கம் கொடுத்தார். பெத் மூனே, ஹேமலதா 'டக்-அவுட்' ஆகினர். அபாரமாக ஆடிய கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் (52) அரைசதம் விளாசினார். பின் இணைந்த ஹர்லீன் தியோல் (34*), டீன்டிரா டாட்டின் (33*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
குஜராத் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

