/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கயானா அணி சாம்பியன்: குளோபல் சூப்பர் லீக் தொடரில்
/
கயானா அணி சாம்பியன்: குளோபல் சூப்பர் லீக் தொடரில்
ADDED : ஜூலை 19, 2025 09:41 PM

கயானா: குளோபல் சூப்பர் லீக் தொடரில் கயானா அணி கோப்பை வென்றது. பைனலில் 32 ரன் வித்தியாசத்தில் ரங்க்பூர் அணியை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு சார்பில், குளோபல் சூப்பர் லீக் ('டி-20') 2வது சீசன் நடந்தது. கயானாவில் நடந்த பைனலில் கயானா வாரியர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ரங்க்பூர் ரைடர்ஸ் (வங்கதேசம்) அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த கயானா அணிக்கு ஜான்சன் சார்லஸ் (67), ரஹ்மானுல்லா குர்பாஸ் (66) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய ரங்க்பூர் அணிக்கு சைப் ஹசன் (41) ஆறுதல் தந்தார். இப்ராஹிம் ஜத்ரன் (5), கைல் மேயர்ஸ் (5), அஸ்மதுல்லா உமர்சாய் (3), கேப்டன் நுாருல் ஹசன் (5) உள்ளிட்டோர் ஏமாற்றினர். ரங்க்பூர் அணி 19.5 ஓவரில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. கயானா சார்பில் டுவைன் பிரிட்டோரியஸ் 3, கேப்டன் இம்ரான் தாஹிர், குடகேஷ் மோதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கயானா அணி முதன்முறையாக கோப்பை வென்றது. ரங்க்பூர் அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைக்க தவறியது. தொடர் நாயகன் விருதை இம்ரான் தாஹிர் வென்றார்.