/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜிம்னாஸ்டிக்ஸ்: சிருஷ்டி 'வெள்ளி'
/
ஜிம்னாஸ்டிக்ஸ்: சிருஷ்டி 'வெள்ளி'
ADDED : மே 12, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாங்காங்: ஆசிய டிராம்போலைன் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சிருஷ்டி வெள்ளி வென்றார்.
ஹாங்காங்கில், ஆசிய டிராம்போலைன் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது. பெண்களுக்கான 'ஏஜ் குரூப்' போட்டியில் திறமையை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை சிருஷ்டி கண்டகலே 39.150 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இத்தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார் சிருஷ்டி.
முதலிடத்தை தட்டிச்சென்ற கஜகஸ்தானின் டோல்கோபோலோவா (46.170 புள்ளி) தங்கம் வென்றார். வெண்கலப்பதக்கத்தை ஹாங்காங்கின் ஹங் (38.140 புள்ளி) தன்வசப்படுத்தினார்.