/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஹென்ரிச் கிளாசன் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து
/
ஹென்ரிச் கிளாசன் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து
ஹென்ரிச் கிளாசன் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து
ஹென்ரிச் கிளாசன் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து
ADDED : ஜூன் 02, 2025 10:47 PM

கேப்டவுன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்ரிக்காவின் கிளாசன் ஓய்வு பெற்றார்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசன் 33. விக்கெட் கீப்பர் பேட்டரான இவர், 2018ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் (பிப். 7, கேப்டவுன்), 'டி-20' (பிப். 18, ஜோகனஸ்பர்க்) போட்டியில் அறிமுகமானார். கடந்த 2019ல் (அக். 19-22) ராஞ்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் முதன்முறையாக பங்கேற்றார்.
இதுவரை 4 டெஸ்ட் (104 ரன்), 60 ஒருநாள் (2141 ரன், 4 சதம், 11 அரைசதம்), 58 சர்வதேச 'டி-20' (1000 ரன், 5 அரைசதம்) போட்டிகளில் விளையாடிய கிளாசன், கடந்த ஆண்டு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை (2024) பைனலில் பங்கேற்ற கிளாசன், கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் (2025) விளையாடினார்.
கடந்த ஏப்ரல் மாதம், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு சார்பில் வெளியான வீரர்கள் சம்பள ஒப்பந்தப்பட்டியலில் கிளாசனுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளாசன் அறிவித்தார். இனி, பிரிமியர் லீக் போன்ற உள்ளூர் 'டி-20' தொடர்களில் மட்டும் பங்கேற்கப் போவதாக தெரிவித்தார். பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் (2018), பெங்களூரு (2019) அணிகளுக்காக விளையாடிய இவர், 2023 முதல் ஐதராபாத் அணி சார்பில் பங்கேற்று வருகிறார்.
கிளாசன் கூறுகையில், ''சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்கும் இந்த நாள், எனக்கு ஒரு சோகமான நாள். தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடியதை கவுரவமாக கருதுகிறேன்,'' என்றார்.