/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை அணி இமாலய வெற்றி: வங்கதேசத்தை வீழ்த்தியது
/
இலங்கை அணி இமாலய வெற்றி: வங்கதேசத்தை வீழ்த்தியது
ADDED : மார் 25, 2024 10:48 PM

சில்ஹெட்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 328 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 280, வங்கதேசம் 188 ரன் எடுத்தன. இலங்கை அணி 2வது இன்னிங்சில் 418 ரன் எடுத்தது. பின் 511 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி 3ம் நாள் முடிவில் 47/5 ரன் எடுத்திருந்தது.
ரஜிதா அசத்தல்
நான்காம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு கசுன் ரஜிதா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' தைஜுல் (6), ஷோரிபுல் (12) வெளியேறினர். மோமினுல் ஹக் அரைசதம் கடந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் (33), ரஜிதாவிடம் சரணடைந்தார்.
வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 182 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. மோமினுல் (87) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் ரஜிதா 5 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா (102, 108 ரன்) வென்றார். இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

