/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.சி., விருது: அட்கின்சன் தேர்வு
/
ஐ.சி.சி., விருது: அட்கின்சன் தேர்வு
ADDED : ஆக 12, 2024 11:03 PM

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரராக இங்கிலாந்தின் அட்கின்சன் தேர்வு.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். ஜூலை மாதத்திற்காக சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியானது. இதில் தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர்களான இங்கிலாந்தின் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் இடம் பெற்றனர்.
இதில் சிறந்த வீரராக அட்கின்சன் 26, தேர்வானார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் அறிமுகமான இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுவரை 3 டெஸ்டில், 22 விக்கெட் சாய்த்துள்ளார்.
அட்கின்சன் கூறுகையில், ''ஐ.சி.சி., விருக்கு தேர்வானது மிகப் பெரிய கவுரவம். இது, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமையும். எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் நம்பமுடியாத விதமாக அமைந்துள்ளது. முதல் தொடரிலேயே சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி,'' என்றார்.
சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப்பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, இலங்கை கேப்டன் சமாரி இடம் பிடித்தனர். இதில் சமாரி, சிறந்த வீராங்கனையாக தேர்வானார். சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பையில் பேட்டிங்கில் அசத்திய இவர், 304 ரன் குவித்தார்.

