/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.சி., விருது: பும்ரா பரிந்துரை
/
ஐ.சி.சி., விருது: பும்ரா பரிந்துரை
ADDED : டிச 05, 2024 09:59 PM

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் பும்ரா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சர்வதேச போட்டியில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். கடந்த நவம்பர் மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் பும்ரா, தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சென், பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் பரிந்துரைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய பும்ரா, 295 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித்தந்தார். 'வேகத்தில்' மிரட்டிய இவர் (8 விக்கெட்), ஆட்ட நாயகன் விருது வென்றார். சமீபத்தில் வெளியான ஐ.சி.சி., பவுலர் தரவரிசையில் மீண்டும் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.
இலங்கைக்கு எதிரான டர்பன் டெஸ்டில் 'வேகத்தில்' அசத்திய (11 விக்கெட்) தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சென், ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் (10 விக்கெட்), 2002க்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி உதவினார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு வங்கதேசத்தின் ஷர்மின் அக்தர், தென் ஆப்ரிக்காவின் நாடின் டி கிளார்க், டேனி வியாட்-ஹாட்ஜ் பரிந்து செய்யப்பட்டுள்ளனர்.