/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.சி., தரவரிசை: இந்தியா 'நம்பர்-1'
/
ஐ.சி.சி., தரவரிசை: இந்தியா 'நம்பர்-1'
ADDED : மே 03, 2024 10:49 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள், 'டி-20' போட்டி தரவரிசையில் இந்திய அணி 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா (116 புள்ளி), தென் ஆப்ரிக்கா (112) அணிகள் உள்ளன. 'டாப்-10' வரிசையில் மாற்றமில்லை. அயர்லாந்து அணி 11வது இடத்துக்கு முன்னேறியது. ஜிம்பாவே அணி 12வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
சர்வதேச 'டி-20' போட்டிக்கான தரவரிசையிலும் இந்திய அணி 264 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. ஆஸ்திரேலியா (257 புள்ளி), தென் ஆப்ரிக்க (250) அணிகள் 2, 4வது இடத்துக்கு முன்னேறின. இங்கிலாந்து (252), நியூசிலாந்து (250), பாகிஸ்தான் (247) அணிகள் 3, 5, 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டன.
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றியது. இந்திய அணி (120) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து (105) உள்ளது.