/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
/
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது
ADDED : நவ 03, 2024 09:50 PM

மக்கே: முதல் டெஸ்டில் ஏமாற்றிய இந்தியா 'ஏ' அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (4 நாள் போட்டி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், மக்கே நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 107, ஆஸ்திரேலியா 'ஏ' 195 ரன் எடுத்தன. இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 312 ரன் எடுத்தது. பின், 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' அணி, 3ம் நாள் முடிவில் 139/3 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி (88), பியூ வெப்ஸ்டர் (61) அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 226/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
அம்பயர்-கிஷான் மோதல்
நான்காம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய அம்பயர் ஷான் கிரேக், புதிய பந்தை வழங்கினார். அப்போது இந்திய வீரர்கள், ஏன் பந்தை மாற்றினீர்கள் எனக் கேட்டனர். அதற்கு அம்பயர், ''நீங்கள் பந்தை சுரண்டியதால் மாற்றினோம். இதுகுறித்து பேசத் தேவையில்லை, ஆட்டத்தை தொடருங்கள்,'' என்றார். இதற்கு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான், ''இது முட்டாள்தனமான முடிவு'' என்றார். அப்போது அம்பயர் கிரேக், ''உங்கள் மீது புகார் அளிக்கப் போவதாக'' எச்சரித்தார்.
போட்டி முடிந்த பின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில், ''பந்து சேதமடைந்ததால் தான் மாற்றப்பட்டது. இஷான் கிஷான் மீது எவ்வித புகாரும் அளிக்கப்படமாட்டாது,'' என தெரிவித்தது.