/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' அணி அபாரம்: கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது
/
இந்தியா 'ஏ' அணி அபாரம்: கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது
இந்தியா 'ஏ' அணி அபாரம்: கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது
இந்தியா 'ஏ' அணி அபாரம்: கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது
ADDED : அக் 19, 2024 10:38 PM

மஸ்கட்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய இந்தியா 'ஏ' அணி 7 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஓமனில், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20') 6வது சீசன் நடக்கிறது. மஸ்கட்டில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ', பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணிக்கு அபிஷேக் சர்மா (35), பிரப்சிம்ரன் சிங் (36) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. நேஹல் வதேரா (25) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் திலக் வர்மா 35 பந்தில் 44 ரன் விளாசினார். இந்தியா 'ஏ' அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ஹாரிஸ் (6), உமைர் யூசுப் (2) ஏமாற்றினர். யாசிர் கான் (33), காசிம் அக்ரம் (27), அராபத் மின்ஹாஸ் (41) நம்பிக்கை அளித்தனர். ஹைதர் அலி (9) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. அன்ஷுல் கம்போஜ் பந்துவீசினார். முதல் பந்தில் அப்துல் சமத் (25) அவுட்டானார். அடுத்த 5 பந்தில், 9 ரன் மட்டும் கிடைத்தன.
பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அபாஸ் அப்ரிதி (16), ஜமான் கான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் அன்ஷுல் 3, ரசிக் சலாம், நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட் சாய்த்தனர்.