/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி
/
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி
ADDED : ஆக 17, 2025 10:06 PM

பிரிஸ்பேன்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்தியா 'ஏ' பெண்கள் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்ற இந்தியா 'ஏ' பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் 3வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணிக்கு ஷபாலி வர்மா (52), நந்தினி (28) காஷ்யப் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ராகவி பிஸ்ட் (18), கேப்டன் ராதா யாதவ் (18), மின்னு மணி (5) நிலைக்கவில்லை. யஸ்திகா பாட்யா (42) ஓரளவு கைகொடுத்தார்.
இந்தியா 'ஏ' அணி 47.4 ஓவரில் 216 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு தஹ்லியா வில்சன் (59) நம்பிக்கை தந்தார். அலிசா ஹீலி சதம் கடந்து கைகொடுத்தார். தனுஸ்ரீ பந்தை சிக்சருக்கு அனுப்பிய அலிசா வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலியா 'ஏ' அணி 27.5 ஓவரில் 222/1 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. அலிசா (137), ராச்சல் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா 'ஏ' அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.