/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': துலீப் டிராபியில் அசத்தல்
/
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': துலீப் டிராபியில் அசத்தல்
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': துலீப் டிராபியில் அசத்தல்
கோப்பை வென்றது இந்தியா 'ஏ': துலீப் டிராபியில் அசத்தல்
UPDATED : செப் 23, 2024 08:22 PM
ADDED : செப் 22, 2024 09:50 PM

அனந்தபூர்: துலீப் டிராபியில் இந்தியா 'ஏ' அணி கோப்பை வென்றது. கடைசி லீக் போட்டியில் 132 ரன் வித்தியாசத்தில் இந்தியா 'சி' அணியை வீழ்த்தியது.
ஆந்திராவின் அனந்தபூரில் துலீப் டிராபி கிரிக்கெட் 61வது சீசன் நடந்தது. லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 297, இந்தியா 'சி' 234 ரன் எடுத்தன. இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 286/8 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
கடைசி நாளில் 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'சி' அணிக்கு சாய் சுதர்சன் (111), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (44) நம்பிக்கை தந்தனர். ரஜத் படிதர் (7), இஷான் கிஷான் (17) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற இந்தியா 'சி' அணி 2வது இன்னிங்சில் 217 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா 'ஏ' சார்பில் தனுஷ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
அர்ஷ்தீப் அசத்தல்
மற்றொரு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 'டி' 349, இந்தியா 'பி' 282 ரன் எடுத்தன. இந்தியா 'டி' அணி 2வது இன்னிங்சில் 305 ரன் எடுத்தது. பின், 373 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'பி' அணி 2வது இன்னிங்சில் 115 ரன்னுக்கு சுருண்டு, 257 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 'டி' சார்பில் அர்ஷ்தீப் சிங் 6, தனுஷ் 4 விக்கெட் சாய்த்தனர்.
இந்தியா 'ஏ' சாம்பியன்லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா 'ஏ' அணி கோப்பை வென்றது. அடுத்த மூன்று இடங்களை இந்தியா 'சி' (9 புள்ளி), இந்தியா 'பி' (7), இந்தியா 'டி' (6) அணிகள் கைப்பற்றின.