ADDED : ஆக 12, 2026 11:03 PM

புதுடில்லி: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 'டி-20' தொடருக்கான அட்டவணை வெளியானது.
இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரை சொந்த மண்ணில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு (ஏ.சி.பி.,) திட்டமிட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகளை இந்தியாவில் நடத்திட முடிவு செய்தது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று போட்டிகளும் வரும் செப். 13, 15, 17ல் டில்லி, அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளன.
கடந்த ஜூன் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணி, கடைசியாக 2024ல் (ஜனவரி) இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் விளையாடியது. இவ்விரு அணிகள் 2018ல் முதல் முறையாக டெஸ்டில் விளையாடின/.இதனையடுத்து, கடந்த ஆண்டு அரசியல் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள், 'டி-20' தொடர் நடக்கும் வாய்ப்பு குறைந்தது.
பி.சி.சி.ஐ., தலைவர் மிதுன் மன்ஹாஸ் கூறுகையில், ''இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் முக்கியமானது. இரு அணி வீரர்களுக்கும் சிறந்த அனுபவம் கிடைக்கும். 'டி-20' தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணியை வரவேற்கிறோம்,'' என்றார்,.
