/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பகலிரவு பயிற்சியில் இந்தியா: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக
/
பகலிரவு பயிற்சியில் இந்தியா: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக
பகலிரவு பயிற்சியில் இந்தியா: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக
பகலிரவு பயிற்சியில் இந்தியா: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக
ADDED : ஆக 09, 2024 10:21 PM

கான்பெரா: அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்மூலம் 1991-92 சீசனுக்கு பின், முதன் முறையாக இவ்விரு அணிகள் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.
இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இதன்படி முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22-26ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.
பகலிரவு டெஸ்ட்: இதில் அடிலெய்டில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலிய 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணியுடன் இரண்டு நாள் பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இப்போட்டி கான்பெராவில் நவ. 30-டிச. 1ல் நடக்கவுள்ளது.
இதன்மூலம் இந்திய அணி, 4வது முறையாக ஆஸ்திரேலிய 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணியுடன் விளையாடுகிறது. கடைசியாக 2004ல் ஸ்டீவ் வாக் தலைமையிலான 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணி, ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.