/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா-பாகிஸ்தான் மோதல்: பெண்கள் 'டி-20' உலக கோப்பையில்
/
இந்தியா-பாகிஸ்தான் மோதல்: பெண்கள் 'டி-20' உலக கோப்பையில்
இந்தியா-பாகிஸ்தான் மோதல்: பெண்கள் 'டி-20' உலக கோப்பையில்
இந்தியா-பாகிஸ்தான் மோதல்: பெண்கள் 'டி-20' உலக கோப்பையில்
ADDED : மே 05, 2024 11:15 PM

துபாய்: பெண்கள் 'டி-20' உலக கோப்பை அட்டவணை வெளியானது. வரும் அக். 6ல் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வங்கதேசத்தில், ஐ.சி.சி., பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் வரும் அக். 3-20ல் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியானது. மொத்தம் 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் (அக். 3-14) பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அக். 17 (சில்ஹெட்), 18ல் (தாகா) நடக்கும் அரையிறுதியில் மோதும். இதில் வெல்லும் அணிகள் அக். 20ல் தாகாவில் நடக்கும் பைனலில் விளையாடும். மொத்தம் 18 நாட்களில், 23 போட்டிகள் நடக்கவுள்ளன.
'ஏ' பிரிவில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதிச் சுற்றில் தேர்வாகும் ஒரு அணி இடம் பெற்றுள்ளன. இப்பிரிவு போட்டிகள் சில்ஹெட்டில் நடக்கும். 'பி' பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், தகுதிச் சுற்றில் தேர்வாகும் ஒரு அணி இடம் பிடித்துள்ளன. இப்பிரிவு போட்டிகள் தாகாவில் நடக்கும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை அக். 4ல் சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (அக். 6), தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணி (அக். 9), 'ஆறு முறை உலக சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (அக். 13) எதிர்கொள்கிறது.