/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 603 ரன் குவித்து சாதனை: பெண்கள் கிரிக்கெட்டில் வரலாறு
/
இந்தியா 603 ரன் குவித்து சாதனை: பெண்கள் கிரிக்கெட்டில் வரலாறு
இந்தியா 603 ரன் குவித்து சாதனை: பெண்கள் கிரிக்கெட்டில் வரலாறு
இந்தியா 603 ரன் குவித்து சாதனை: பெண்கள் கிரிக்கெட்டில் வரலாறு
ADDED : ஜூன் 29, 2024 10:18 PM

சென்னை: பெண்கள் டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி, அதிக ரன் (603) குவித்து உலக சாதனை படைத்தது.
இந்தியா, தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி (4 நாள்) சென்னையில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 525 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் அரைசதம் கடந்தனர். ஹர்மன்பிரீத், 69 ரன்னில் அவுட்டானார். ரிச்சா கோஷ், 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
ராணா அசத்தல்
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்னே ராணா தொல்லை தந்தார். இவரது 'சுழலில்' கேப்டன் லாரா வோல்வார்ட் (20), அன்னேகே போஷ் (39) சிக்கினர். தீப்தி சர்மா பந்தில் சுனே லுாஸ் (65) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஸ்னே ராணா பந்தில் டெல்மி டக்கர் 'டக்-அவுட்' ஆனார்.
ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 236 ரன் எடுத்து, 367 ரன் பின்தங்கி இருந்தது. மரிசன்னே காப் (69), நாடின் டி கிளார்க் (27) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஸ்னே ராணா 3 விக்கெட் சாய்த்தார்.
'டாப்-2' யார்...
பெண்கள் டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணியானது இந்தியா. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 575/9 ரன் (எதிர்: தென் ஆப்ரிக்கா, 2024, இடம்: பெர்த்) எடுத்திருந்தது.
143 ரன்
இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் கூட்டணி, பெண்கள் டெஸ்டில் 5வது விக்கெட்டுக்கு அதிக ரன் (143) சேர்த்த ஜோடியானது. முன்னதாக தென் ஆப்ரிக்காவின் ஜோமரி லாக்டன்பர்க், சார்லிஸ் வான் டெர் வெஸ்துய்சென் ஜோடி (138 ரன், எதிர்: இங்கிலாந்து, 2003) முதலிடத்தில் இருந்தது.