/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா-இலங்கை தொடர்: அட்டவணை மாற்றம்
/
இந்தியா-இலங்கை தொடர்: அட்டவணை மாற்றம்
ADDED : ஜூலை 14, 2024 12:15 AM

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஒருநாள், 'டி-20' தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.
இலங்கை செல்லும் இந்திய அணி, மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் போர்டு சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி 'டி-20' போட்டிகள் வரும் ஜூலை 26, 27, 29ல் பல்லேகெலேயிலும், ஒருநாள் போட்டிகள் ஆக., 1, 4, 7 ல் கொழும்புவிலும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த அட்டவணையில் பி.சி.சி.ஐ., மாற்றம் செய்துள்ளது. இதன்படி 'டி-20' போட்டிகள் ஜூலை 27, 28, 30ல் பல்லேகெலேயில் நடக்கும். கொழும்புவில் நடக்கும் ஒருநாள் தொடருக்கான முதல் போட்டி ஆக. 2ல் நடத்தப்படும். மீதமுள்ள போட்டிகள் திட்டமிட்டபடி ஆக. 4, 7 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இத்தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.