/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: கூச் பெஹார் டிராபியில்
/
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: கூச் பெஹார் டிராபியில்
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: கூச் பெஹார் டிராபியில்
தமிழக பவுலர்கள் தடுமாற்றம்: கூச் பெஹார் டிராபியில்
UPDATED : ஜன 11, 2026 11:15 PM
ADDED : ஜன 10, 2026 11:29 PM

சாகர்: 'கூச் பெஹார் டிராபி' அரையிறுதியில் தமிழக பவுலர்கள் தடுமாற, மத்திய பிரதேச அணி வலுவான முன்னிலை பெற்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 'கூச் பெஹார் டிராபி' (4 நாள் போட்டி) நடத்தப்படுகிறது. சாகரில் உள்ள மத்திய பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' தமிழகம், மத்திய பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 320, தமிழகம் 193 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் மத்திய பிரதேச அணி 2வது இன்னிங்சில் 26/0 ரன் எடுத்து, 153 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் மத்திய பிரதேச அணிக்கு ஆர்யன் (46), யாஷ்பரதன் சிங் (42) கைகொடுத்தனர். ஹர்ஷித் யாதவ் (20), கேப்டன் மனால் சவுகான் (15) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் மத்திய பிரதேச அணி 2வது இன்னிங்சில் 214/8 ரன் எடுத்து, 341 ரன் முன்னிலை பெற்றுள்ளது. அர்னவ் ஷர்தா (43), ஆயாம் சர்தானா (7) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் பி.கே. கிஷோர் 4, ஹேம்சுதேஷன் 3 விக்கெட் கைப்பற்றினர்.

