தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சாம்சனுக்கு 'செக்' வைப்பாரா வைபவ்: இரண்டாவது 'டி-20' போட்டியில்

சாம்சனுக்கு 'செக்' வைப்பாரா வைபவ்: இரண்டாவது 'டி-20' போட்டியில்

சாம்சனுக்கு 'செக்' வைப்பாரா வைபவ்: இரண்டாவது 'டி-20' போட்டியில்


ADDED : அக் 08, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஞ்சி: இளம் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பை எதிர்பார்ப்பதால், சஞ்சு சாம்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, அக். 9ல் ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) நடக்க உள்ளது.

ஷ்ரேயஸ் நம்பிக்கை: இந்திய அணிக்கு 'டாப்-ஆர்டரில்' சஞ்சு சாம்சன் ஏமாற்றுகிறார். கடந்த நான்கு போட்டியில் 9, 7, 2, 11 ரன் தான் எடுத்துள்ளார். முதல் போட்டியில் இவர், விரைவில் வெளியேறிய போதும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சதம் விளாசி வெற்றி தேடித் தந்தார். இன்று அபிஷேக் சர்மா உடன் துவக்க வீரராக 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்கலாம். சமீபத்திய ஆசிய விளையாட்டில் 18, 35 ரன் எடுத்தார். சாம்சன் மீது இந்திய அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. ஆசிய விளையாட்டில் வைபவ் இடம் பெற்ற நிலையில், சாம்சன் 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். இந்த நம்பிக்கையை சாம்சன் காப்பாற்ற வேண்டும். இஷான் கிஷான், திலக் வர்மா, ஷிவம் துபே போன்ற அதிரடி பேட்டர்கள் இருப்பதால், உள்ளூரில் அசைக்க முடியாத 'டி-20' அணியாக இந்தியா திகழ்கிறது. இன்று தனது வெற்றிநடையை தொடரலாம்.

'வேகத்தில்' மிரட்ட, அர்ஷ்தீப் சிங் உள்ளார். மயங்க் யாதவ் அதிக ரன் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். 'சுழலில்' குல்தீப் யாதவ், அக்சர் படேல், நமன் திர் அசத்துவது பலம்.

தடுமாறும் ஹெட்மெயர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் தனிநபராக போராடுகிறார். சர்வதேச 'டி-20' அரங்கில் பிரபலமான ஹெட்மெயர், ராவ்மென் பாவெல், ராஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்டு போன்றோர் ஏமாற்றுவது பலவீனம். பும்ரா இல்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்னுக்கு மேல் எடுத்தால், இந்தியாவுக்கு சவால் தரலாம். 'சுழலில்' அகில் ஹூசைன் கைகொடுக்கலாம்.

பயிற்சியில் இஷான்

ராஞ்சி மைதானத்தில் நடந்த வலை பயிற்சியில் உள்ளூர் 'ஹீரோ' இஷான் கிஷான் (ஜார்க்கண்ட் அணி கேப்டன்), அபிஷேக், சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, 'பேட்டிங்' பயிற்சியில் ஈடுபட்டனர். வைபவ் ஆட்டத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், மயங்க் யாதவ் உள்ளிட்டோர் பயிற்சியை தவிர்த்தனர்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 32 'டி-20' போட்டிகளில் மோதின. இந்தியா 21, வெஸ்ட் இண்டீஸ் 10ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

* ராஞ்சி ஆடுகளத்தில் 'வேகங்கள்' சாதிக்கலாம்.

* மழைக்கான வாய்ப்பு குறைவு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us