/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: 'யூத்' டெஸ்டில் அசத்தல்
/
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: 'யூத்' டெஸ்டில் அசத்தல்
ADDED : அக் 02, 2025 11:08 PM

பிரிஸ்பேன்: 'யூத்' டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ், 58 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் (19 வயது) மோதிய முதலாவது 'யூத்' டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243, இந்தியா 428 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 8/1 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தீபேஷ் 'சுழலில்' ஸ்டீவன் ஹோகன் (3) போல்டானார். அலெக்ஸ் டர்னர் (11), கேப்டன் வில் மலாஜ்சுக் (22), ஜெட் ஹோலிக் (13) நிலைக்கவில்லை. சைமன் பட்ஜ் (0), டாம் ஹோகன் (3), ஜான் ஜேம்ஸ் (10) சோபிக்கவில்லை. ஆர்யன் சர்மா (43) ஆறுதல் தந்தார்.
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 127 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. ஹேடன் ஷில்லர் (16) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் தீபேஷ், கிலான் படேல் தலா 3, கிஷான் குமார், அன்மோல்ஜீத் சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.