/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி சாம்பியன்ஸ் டிராபியில்
/
கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி சாம்பியன்ஸ் டிராபியில்
கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி சாம்பியன்ஸ் டிராபியில்
கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி சாம்பியன்ஸ் டிராபியில்
ADDED : ஜன 21, 2025 10:52 PM

கொழும்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பை வென்றது. பைனலில் 79 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இலங்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி ('டி-20') கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து என 4 அணிகள் பங்கேற்றன. கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு யோகேந்திர படோரியா (73 ரன், 40 பந்து, 5 சிக்சர், 4 பவுண்டரி) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 197 ரன் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 118 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ராதிகா பிரசாத் 4/19 (3.2 ஓவர்), விக்ராந்த் கேனி 2/15 (3 ஓவர்), ரவிந்திர சாண்டே 2/24 (4 ஓவர்) விக்கெட் சாய்த்தனர்.
கோப்பை வென்ற இந்திய அணி, லீக் சுற்றில் இங்கிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.