sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கான்பூரில் காத்திருக்கும் அஷ்வின் சாதனை * இரண்டாவது டெஸ்டில் எதிர்பார்ப்பு

/

கான்பூரில் காத்திருக்கும் அஷ்வின் சாதனை * இரண்டாவது டெஸ்டில் எதிர்பார்ப்பு

கான்பூரில் காத்திருக்கும் அஷ்வின் சாதனை * இரண்டாவது டெஸ்டில் எதிர்பார்ப்பு

கான்பூரில் காத்திருக்கும் அஷ்வின் சாதனை * இரண்டாவது டெஸ்டில் எதிர்பார்ப்பு


ADDED : செப் 25, 2024 11:00 PM

Google News

ADDED : செப் 25, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கான்பூர்: 'டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்சில் 100 விக்கெட் சாய்த்த முதல் இந்தியர்,' என சாதிக்க காத்திருக்கிறார் இந்தியாவின் அஷ்வின்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது, கடைசி டெஸ்ட், கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் செப். 27-அக். 1ல் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் இந்திய 'சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பல்வேறு சாதனை படைக்க காத்திருக்கிறார். இதன் விபரம்:

* 100 வது விக்கெட்

டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்சில் மட்டும் அஷ்வின், இதுவரை 99 விக்கெட் சாய்த்துள்ளார். இன்னும் ஒரு விக்கெட் சாய்க்கும் பட்சத்தில், நான்காவது இன்னிங்சில் 100 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர், உலக அளவில் ஆறாவது பவுலர் ஆகலாம்.

* ஜாகிரை முந்தலாம்

வங்கதேசத்திற்கு எதிராக இதுவரை அஷ்வின், 29 விக்கெட் சாய்த்துள்ளார். கூடுதலாக 3 விக்கெட் கைப்பற்றினால், இந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் முதலிடம் பிடிக்கலாம். முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் 31 விக்கெட் சாய்த்துள்ளார்.

* வருமா '52'

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ல் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (51 விக்.,) முதலிடத்தில் உள்ளார். கான்பூரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவின் அஷ்வின் (48 விக்.,) ஹேசல்வுட்டை முந்தலாம்.

* 37 வது முறை

சென்னையில் 6 விக்கெட் சாய்த்த அஷ்வின், டெஸ்டில் அதிக முறை 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட் சாய்த்த பவுலர்களில், இரண்டாவது இடத்தை ஷேன் வார்னுடன் (ஆஸி.,) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 37 முறை இதுபோல அசத்தினர். இரண்டாவது டெஸ்டில் மிரட்டினால், இந்த வரிசையில் இலங்கையின் முரளிதரனுக்கு (67) அடுத்து, அஷ்வின் இரண்டாவது இடம் பெறுவார்.

* முதல் பவுலர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் சாய்த்த பவுலராக தற்போது ஆஸ்திரேலியாவின் லியான் (187 விக்.,) உள்ளார். கான்பூரில் அஷ்வின், 8 விக்கெட் கைப்பற்றினால், லியானை முந்தி, 'முதல்வன்' ஆக வாய்ப்புள்ளது.

* தவிர அஷ்வின், இன்னும் 9 விக்கெட் வீழ்த்தினால், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் லியானை (530) முந்தி, 7வது இடம் பெறலாம். அஷ்வின் இதுவரை 522 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

இது நல்லதல்ல

இந்திய அணி கேப்டன் ரோகித், கோலி என இருவரும் சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். இருப்பினும் துலீப் டிராபியில் பங்கேற்க இவர்களுக்கு விலக்கு தரப்பட்டது. ஆனால் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் சோபிக்கவில்லை. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,'' ரோகித், கோலி துலீப் டிராபியில் விளையாடாதது, அவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல. முன் செய்ய சாதனை அடிப்படையில் சில வீரர்கள் மட்டும், ஸ்பெஷலாக நடத்தப்படுவது, இங்கு ஒரு பிரச்னையாகவே உள்ளது. கடைசியில் இது மற்றவர்களை விட, சம்பந்தப்பட்ட வீரர்களைத் தான் அதிகம் பாதிக்கிறது,'' என்றார்.

சிக்சர் அடிச்சா...

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தின் 'சி ஸ்டாண்ட்' பகுதி பலவீனமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள 4800 டிக்கெட்டில், 1700 மட்டுமே விற்க வேண்டும் என 'அட்வைஸ்' செய்யப்பட்டுள்ளது.

தவிர, மின்னொளி கோபுரத்திலும் பழுது உள்ளது. 2021 டெஸ்ட், கடைசி நாளில் இங்கு மின்னொளி பிரச்னை ஏற்பட்டது. அப்போது, நியூசிலாந்தின் ரச்சின், அஜாஸ் இணைந்து கடைசி விக்கெட் விழவிடாமல் தடுத்து, போட்டியை 'டிரா' செய்தனர். 3 ஆண்டு முடிந்த போதும், இப்பிரச்னை இன்னும் சரிசெய்யப்படவில்லை.

உ.பி., பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''மைதானத்தின் ஒருபகுதி சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இங்குள்ள பால்கனி பகுதி, 50 ரசிகர்கள் எடையை கூட தாங்காது. ரிஷாப் பன்ட் சிக்சர் அடித்தவுடன், ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தால் அவ்வளவு தான், அப்படியே சரிந்து விடும். அடுத்த சில நாள் பராமரிப்பு பணி தொடர்ந்து நடக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us