ADDED : பிப் 07, 2025 10:56 PM

புதுடில்லி: பும்ரா 'ஸ்கேன்' விவரம் இன்று வெளியாகிறது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31. சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்திய இவர், 32 விக்கெட் சாய்த்தார். சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட முதுகுப்பகுதி காயம் காரணமாக, பாதியில் விலகினார். வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக (பிப். 19-மார்ச் 9) இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதனிடையே பும்ராவுக்கு நேற்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்கேன் செய்யப்பட்டது. இதற்கான 'ரிப்போர்ட்' இன்று வெளியாகிறது. தவிர, 2023ல் நியூசிலாந்தில் பும்ராவுக்கு ஆப்பரேசன் செய்த டாக்டரிடம், இந்த அறிக்கை அனுப்பப்பட்டு, ஆலோசனை கேட்கப்பட உள்ளது. இதன் பின் இந்திய கிரிக்கெட் போர்டு, பும்ரா நிலை குறித்து முடிவெடுக்க உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி அணியை பிப். 12க்குள் அறிவிக்க வேண்டும் என்பதால், பும்ரா அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது நீக்கப்படுவாரா என இன்று தெரியலாம். இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் காம்பிர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.