ADDED : ஏப் 01, 2025 12:14 AM

பெங்களூரு: இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் (சிட்னி, ஜன. 4) முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக, பாதியில் விலகினார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.
பின் டாக்டர் 'அட்வைஸ்' படி, சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்து நீக்கப்பட்டார். பிரிமியர் தொடரிலும் இன்னும் களமிறங்கவில்லை. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையில் உள்ள பும்ரா, பவுலிங் பயிற்சியை துவக்கி உள்ளார்.
வலைப்பயிற்சியில் பவுலிங் செய்யும் வீடியோ இணையதளங்களில் வெளியானது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஒருவர் கூறுகையில், ''பும்ரா நன்றாக தேறிவருகிறார். இருப்பினும் எப்போது திரும்பி வருவார் என காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் பும்ரா, போட்டிகளுக்கு திரும்பலாம்,'' என்றார்.

