sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஆயிரம் மடங்கு சிறந்தவர் பும்ரா... * கபில்தேவ் பாராட்டு

/

ஆயிரம் மடங்கு சிறந்தவர் பும்ரா... * கபில்தேவ் பாராட்டு

ஆயிரம் மடங்கு சிறந்தவர் பும்ரா... * கபில்தேவ் பாராட்டு

ஆயிரம் மடங்கு சிறந்தவர் பும்ரா... * கபில்தேவ் பாராட்டு


ADDED : ஜூன் 27, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''என்னைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் பும்ரா,'' என கபில்தேவ் பாராட்டினார்.

இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை வென்று தந்தவர் ஜாம்பவான் கபில்தேவ். வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டரான' இவர், 131 டெஸ்டில் 434 விக்கெட், 5248 ரன் குவித்தார். 225 ஒருநாள் போட்டிகளில் (253 விக்., 3783 ரன்) பங்கேற்றார்.

இவரை போலவே இந்திய 'வேகப்புயல்' பும்ராவும் மிரட்டுகிறார். 36 டெஸ்ட் (159 விக்.,), 89 ஒருநாள் போட்டி (149 விக்.,), 68 'டி-20' போட்டிகளில் (85 விக்.,) பங்கேற்றுள்ளார். தற்போதைய 'டி-20' உலக கோப்பை தொடரில், 23 ஓவரில் 11 விக்கெட் சாய்த்துள்ளார். இதன் 'எகானமி' 4.08 என்பது சிறப்பு.

இது குறித்து கபில்தேவ் கூறுகையில்,''எனது இளமைக்கால பந்துவீச்சுடன் ஒப்பிடுகையில், பும்ரா ஆயிரம் மடங்கு சிறந்த பவுலராக உள்ளார். எங்களுக்கு அனுபவம் பலமாக இருந்தது. தற்போதைய இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். உடற்தகுதியில் 'பிட்' ஆக உள்ளனர். களத்தில் கடினமாக உழைக்கின்றனர்.

உலக கோப்பை வெல்ல அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வீரரை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது.

1983ல் இந்தியா உலக கோப்பை வெல்ல ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், யஷ்பால் சர்மா என அனைவரும் கை கொடுத்தனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us