/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலிக்கு டெஸ்ட் சாம்பியன் கோப்பை * டிராவிட் 'அட்வைஸ்'
/
கோலிக்கு டெஸ்ட் சாம்பியன் கோப்பை * டிராவிட் 'அட்வைஸ்'
கோலிக்கு டெஸ்ட் சாம்பியன் கோப்பை * டிராவிட் 'அட்வைஸ்'
கோலிக்கு டெஸ்ட் சாம்பியன் கோப்பை * டிராவிட் 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 01, 2024 11:12 PM

பிரிட்ஜ்டவுன்: ''டி-20, ஒருநாள் உலக கோப்பை வென்ற கோலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் கோப்பை வெல்ல வேண்டும்'' என டிராவிட் விருப்பம் தெரிவித்தார்.
இந்திய அணி வீரர் கோலி 35. கடந்த 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை), தற்போது 2024ல் 'டி-20' உலக கோப்பை என மூன்று முக்கிய தொடர்களில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். அடுத்து இவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்லும் அணியிலும் இருக்க வேண்டும் என பயிற்சியாளர் டிராவிட் 51, தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை வென்ற இந்திய அணியினர் 'டிரசிங் ரூமில்' கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோலியை பார்த்து, டிராவிட் கூறுகையில்,' வெள்ளை நிற பந்தில் விளையாடப்படும் மூன்று வித ஐ.சி.சி., தொடரில் கோப்பை வென்றாச்சு, அடுத்து சிவப்பு நிற பந்தில் விளையாடப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மட்டும் மீதமுள்ளது. இதிலும் சிறப்பாக செயல்பட்டு கோலி, கோப்பை வெல்ல வேண்டும்,' என்றார்.
இந்த வீடியோவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளது.
விரைவில் பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் ஜெய் ஷா கூறுகையில்,'' ஜிம்பாப்வே தொடருக்கு லட்சுமண், பயிற்சியாளராக செல்வார். புதிய பயிற்சியாளர் நேர்முகத் தேர்வு முடிந்துள்ளது. இருவர் பெயர் பரிசீலனையில் உள்ளது, மும்பை வந்ததும் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
கைகொடுத்த சீனியர்கள்
ஜெய் ஷா கூறுகையில், ''2023 உலக கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி (பைனல் தவிர) பெற்றோம். அதே கேப்டன் ரோகித் தான் இப்போது கோப்பை வென்று தந்துள்ளார். அனுபவம் தான் இதற்கு முக்கிய காரணம். உலக கோப்பை போன்ற முக்கிய தொடரில் அணியில் மாற்றம் என்ற பெயரில் அதிக சோதனையில் ஈடுபடக் கூடாது,'' என்றார்.