/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பேட்டர்கள் திணறல் ஆட்டம்
/
இந்திய பேட்டர்கள் திணறல் ஆட்டம்
UPDATED : டிச 16, 2024 04:17 PM
ADDED : டிச 15, 2024 11:29 PM

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி திணறி வருகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடக்கிறது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 405 ரன் எடுத்திருந்தது. கேரி (45), ஸ்டார்க் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க் (18) பும்ரா பந்தில் அவுட்டானார். சிராஜிடம் லியான் (2) சிக்கினார். மறுபக்கம் அரைசதம் கடந்த கேரி, 70 ரன்னில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல 'டாப் ஆர்டர்' வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். ஸ்டார்க் வீசிய 2வது பந்தில் ஜெய்ஸ்வால் (4) அவுட்டானார். சுப்மன் கில் (1), கோலி (3), ரிஷாப் (9) நிலைக்கவில்லை. மழை, போதிய வெளிச்சமின்மையால் மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 51/4 ரன் எடுத்து, 394 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (33), ரோகித் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.