/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணி பயிற்சியாளர் லட்சுமண்: தென் ஆப்ரிக்க தொடருக்கு
/
இந்திய அணி பயிற்சியாளர் லட்சுமண்: தென் ஆப்ரிக்க தொடருக்கு
இந்திய அணி பயிற்சியாளர் லட்சுமண்: தென் ஆப்ரிக்க தொடருக்கு
இந்திய அணி பயிற்சியாளர் லட்சுமண்: தென் ஆப்ரிக்க தொடருக்கு
ADDED : அக் 28, 2024 10:48 PM

புதுடில்லி: தென் ஆப்ரிக்க 'டி-20' தொடருக்கான பயிற்சியாளராக லட்சுமண் செயல்பட உள்ளார்.
இந்திய அணி வரும் நவம்பர் மாதம் தென் ஆப்ரிக்கா சென்று, நான்கு போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. டர்பன் (நவ. 8), ஜிகுபெர்ஹா (10), செஞ்சுரியன் (13), ஜோகனஸ்பர்க் (15) என நான்கு மைதானங்களில் போட்டி நடக்க உள்ளன. இதற்கான இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் உள்ளார். தற்காலிக பயிற்சியாளராக லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
லட்சுமண் ஏன்: காம்பிர் தலைமையிலான இந்திய அணி, 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடருக்காக (5 போட்டி), வரும் நவ. 10ல் ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளது. இதனால் தென் ஆப்ரிக்கா செல்லும் அணிக்கு லட்சுமண், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடர் தேவையா: இந்தியாவில் தற்போது ரஞ்சி கோப்பை முதல் தர தொடர் நடக்கிறது. ஏற்கனவே ருதுராஜ் தலைமையிலான இந்திய ஏ அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அடுத்து இந்திய சீனியர் அணியும் அங்கு செல்ல உள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''ஏற்கனவே பல்வேறு தொடர் நடக்கும் நிலையில், இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் தேவையில்லாதது,'' என்றார்.