/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் வெற்றி: நான்காவது 'டி-20' போட்டியில்
/
இந்திய பெண்கள் வெற்றி: நான்காவது 'டி-20' போட்டியில்
இந்திய பெண்கள் வெற்றி: நான்காவது 'டி-20' போட்டியில்
இந்திய பெண்கள் வெற்றி: நான்காவது 'டி-20' போட்டியில்
ADDED : மே 06, 2024 10:52 PM

சில்ஹெட்: நான்காவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி 56 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்திய அணி 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. சில்ஹெட்டில் 4வது போட்டி நடந்தது. இது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்ற 300வது சர்வதேச போட்டியானது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (2) ஏமாற்றினார். ஹேமலதா 22 ரன் எடுத்தார். இந்திய அணி 5.5 ஓவரில் 48/2 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின் தலா 14 ஓவர் கொண்ட போட்டியாக தொடர்ந்தது. ஸ்மிருதி மந்தனா (22), ரிச்சா கோஷ் (24), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (39) கைகொடுத்தனர். இந்திய அணி 14 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது.
'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி வங்கதேச வெற்றிக்கு 14 ஓவரில் 125 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வங்கதேச அணி 14 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 68 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. திலாரா (21), ருப்யா (13) ஆறுதல் தந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா, ஆஷா சோபனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது.