/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் ஏமாற்றம்: இரண்டாவது ஒருநாள் போட்டியில்
/
இந்திய பெண்கள் ஏமாற்றம்: இரண்டாவது ஒருநாள் போட்டியில்
இந்திய பெண்கள் ஏமாற்றம்: இரண்டாவது ஒருநாள் போட்டியில்
இந்திய பெண்கள் ஏமாற்றம்: இரண்டாவது ஒருநாள் போட்டியில்
ADDED : அக் 27, 2024 10:56 PM

ஆமதாபாத்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. ஆமாதாபாத்தில் 2வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு சுசி பேட்ஸ் (58), ஜார்ஜியா (41) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் சோபி டெவின் 79 ரன் விளாசினார். மேடி கிரீன் (42) கைகொடுத்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ராதா யாதவ் 4, தீப்தி சர்மா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (0) ஏமாற்றினார். ஷபாலி வர்மா (11), யாஷ்திகா பாட்யா (12) சோபிக்கவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (24), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (17), தேஜல் (15), தீப்தி சர்மார் (15) நிலைக்கவில்லை. பின் இணைந்த ராதா யாதவ், சைமா தாகூர் ஆறுதல் தந்தனர். ஒன்பதாவது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது சைமா (29) அவுட்டானார். ராதா 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 47.1 ஓவரில் 183 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் லியா தஹுகு, சோபி டெவின் தலா 3 விக்கெட் சாய்த்தனர். தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது, கடைசி போட்டி நாளை ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.