/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் இமாலய வெற்றி: 103 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
/
இந்திய பெண்கள் இமாலய வெற்றி: 103 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
இந்திய பெண்கள் இமாலய வெற்றி: 103 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
இந்திய பெண்கள் இமாலய வெற்றி: 103 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
ADDED : டிச 22, 2024 09:54 PM

வதோதரா: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 211 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வதோதராவில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, அறிமுக பிரதிகா ராவல் நல்ல துவக்கம் கொடுத்தனர். அபி பிளட்சர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மந்தனா, 62 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது பிரதிகா (40) அவுட்டானார். மந்தனா, 102 பந்தில் 91 ரன் (13 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்லீன் தியோல் (44), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (34), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (31), ரிச்சா கோஷ் (26) ஓரளவு கைகொடுத்தனர்.
இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜைதா ஜேம்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலி மேத்யூஸ் (0), கியானா ஜோசப் (0), ரஷாதா வில்லியம்ஸ் (5), டீன்டிரா டாட்டின் (8) ஏமாற்றினர். ஷெமைன் (21), ஆலியா (13) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 26.2 ஓவரில் 103 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. அபி பிளட்சர் (24) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ரேணுகா சிங் 5, பிரியா மிஷ்ரா 2 விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை ரேணுகா வென்றார்.
211 ரன்வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி, பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் தனது 2வது சிறந்த வெற்றியை (211 ரன்) பெற்றது. கடந்த 2017ல் அயர்லாந்து அணியை 249 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்தியாவின் பெரிய வெற்றியாக உள்ளது.