/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது
/
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது
ADDED : டிச 05, 2024 09:54 PM

பிரிஸ்பேன்: முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் முதல் போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு பிரியா புனியா (3), ஸ்மிருதி மந்தனா (8) ஏமாற்றினர். ஹர்லீன் தியோல் (19), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (19), ஜெமிமா (23), ரிச்சா கோஷ் (14) சோபிக்கவில்லை. தீப்தி சர்மா (1), சைமா தாகூர் (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இந்திய அணி 34.2 ஓவரில் 100 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் மேகன் ஷட் 5 விக்கெட் சாய்த்தார்.
சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு லிட்ச்பீல்டு (35) நல்ல துவக்கம் கொடுத்தார். எல்லிஸ் பெர்ரி (1), பெத் மூனே (1), அனாபெல் (6), ஆஷ்லி கார்டுனர் (8) ஏமாற்றினர். அறிமுக போட்டியில் ஜார்ஜியா (46*) நம்பிக்கை தந்தார். டைட்டாஸ் சாது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கேப்டன் தஹ்லியா மெக்ராத் (4*) வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 102 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 3, பிரியா மிஷ்ரா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகி விருதை மேகன் ஷட் (ஆஸி.,) வென்றார்.