/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ராகுல், ஜடேஜா அரைசதம் * 'பாலோ ஆன்' தவிர்த்தது இந்தியா
/
ராகுல், ஜடேஜா அரைசதம் * 'பாலோ ஆன்' தவிர்த்தது இந்தியா
ராகுல், ஜடேஜா அரைசதம் * 'பாலோ ஆன்' தவிர்த்தது இந்தியா
ராகுல், ஜடேஜா அரைசதம் * 'பாலோ ஆன்' தவிர்த்தது இந்தியா
UPDATED : டிச 17, 2024 04:02 PM
ADDED : டிச 16, 2024 11:14 PM

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் ராகுல், ஜடேஜா அரைசதம் அடித்தனர். இந்திய அணி 'பாலோ ஆனை' தவிர்த்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 51/4 ரன் எடுத்து, 394 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (33), ரோகித் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித் 10 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். பின் ஜடேஜா, ராகுல் இணைந்து போராடினர். ராகுல் அரைசதம் அடித்தார். இவர் 84 ரன் எடுத்து லியான் சுழலில் சிக்கினார்.
அவ்வப்போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடர்ந்தது. ஜடேஜா தன் பங்கிற்கு அரைசதம் அடிக்க, மறுபக்கம் நிதிஷ் குமார் (16), சிராஜ் (1) கிளம்பினர். ஜடேஜா 77 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 213/9 ரன் என திணறியது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடும் நிலையை ('பாலோ ஆன்') தவிர்க்க, இந்தியாவுக்கு 246 ரன் தேவைப்பட்டன. இந்நிலையில் கடைசி நேரத்தில் இணைந்த பும்ரா, ஆகாஷ் தீப் ஜோடி நம்பிக்கை தந்தது. கம்மின்ஸ் வீசிய போட்டியின் 75 வது ஓவரில் ஆகாஷ் தீப், தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, இந்திய அணி 'பாலோ ஆனை' தவிர்த்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 252/9 ரன் எடுத்த போது, போதிய வெளிச்சமின்மையால் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆகாஷ் தீப் (27), பும்ரா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.