sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

மீண்டும் சரிந்தது இந்திய 'பேட்டிங்' * மெல்போர்ன் டெஸ்டில் தோல்வி

/

மீண்டும் சரிந்தது இந்திய 'பேட்டிங்' * மெல்போர்ன் டெஸ்டில் தோல்வி

மீண்டும் சரிந்தது இந்திய 'பேட்டிங்' * மெல்போர்ன் டெஸ்டில் தோல்வி

மீண்டும் சரிந்தது இந்திய 'பேட்டிங்' * மெல்போர்ன் டெஸ்டில் தோல்வி

3


ADDED : டிச 30, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 30, 2024 11:23 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில்பேட்டர்கள் மீண்டும் சொதப்ப, இந்திய அணி 184 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜெய்ஸ்வால்(84), ஆறுதல் தந்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில்இருந்தது.

நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) மெல்போர்னில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474, இந்தியா369 ரன் எடுத்தன.நான்காவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 228 ரன் எடுத்து, 333 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

பும்ரா 'ஐந்து'

நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா பந்தில், லியான் (41) போல்டானார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 234 ரன் எடுத்தது. பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்.

கடின இலக்கு

இரண்டாவது இன்னிங்சில் 92 ஓவரில், 340 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்தியா. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி களமிறங்கியது. போட்டியை 'டிரா' செய்தால் போதும் என்ற எண்ணத்தில் ஆமை வேகத்தில் ரன் சேர்த்தது இந்த ஜோடி. கம்மின்ஸ் தனது 17 வது ஓவரை வீசினார். இதன் முதல் பந்தில் அவுட்டானார் ரோகித் (9). கடைசி பந்தில் ராகுல் 'டக்' அவுட்டானார்.

இந்திய அணி 26 ஓவரில் இந்தியா 33/2 ரன் மட்டும் எடுத்தது. ஸ்டார்க் 'வேகத்தில்' கோலி (5) வீழ்ந்தார்.

கைவிட்ட ரிஷாப்

ஜெய்ஸ்வால், ரிஷாப் இணைந்து சற்று வேகமாக ரன் சேர்த்தனர். லியான் பந்தில் பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வால், இப்போட்டியில் இரண்டாவது முறையாக அரைசதம் கடந்தார். 27.5 ஓவரில் 79 ரன் சேர்த்த இந்த ஜோடி, தேநீர் இடைவேளை வரை அவுட்டாகாமல் இருந்தது. இந்தியா 54 ஓவரில் 112/3 ரன் எடுத்திருந்தது.

இந்தியா கைவசம் 7 விக்கெட் மீதம் இருக்க, இன்னும் 38 ஓவர் தாக்குப்பிடித்தால் போதும், போட்டி 'டிரா' ஆகும் நிலை இருந்தது. ஆனால் 'பார்ட் டைம் பவுலர்' ஹெட் பந்தை, தேவையில்லாமல் ரிஷாப் துாக்கி அடிக்க, மார்ஷ் 'கேட்ச்' செய்ய, போட்டியில் திருப்பம் ஏற்பட்டது.

ஜெய்ஸ்வால் போராட்டம்

அடுத்த சில நிமிடங்களில் ஜடேஜா (2), நிதிஷ் குமார் (1) அவுட்டாகினர். போராடிய ஜெய்ஸ்வால் (84), சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக, இந்தியா தோல்வி உறுதியானது. 21 ஓவர் வீசப்பட வேண்டிய நிலையில் இந்தியாவிடம் 3 விக்கெட் மீதம் இருந்தன. ஆனால் அடுத்த 8 ஓவருக்குள் ஆகாஷ் (7), பும்ரா (0), சிராஜ் (0) வெளியேறினர்.

'டிரா' செய்ய வேண்டிய போட்டியை கோட்டைவிட்ட இந்தியா, 155 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. ஜெய்ஸ்வால், ரிஷாப் தவிர யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியது.

ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில் (ஜன. 3-7) நடக்க உள்ளது.

34 ரன், 7 விக்.,

இந்திய அணி ஒரு கட்டத்தில் 121/3 என இருந்தது. இன்னும் 38 ஓவர் தாக்குப் பிடித்தால் போட்டியை 'டிரா' செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால், அடுத்த 20.4 ஓவரில் 34 ரன் எடுப்பதற்குள், 7 விக்கெட்டுகளை இழந்து (155/10) தோற்றது.

ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை

ஆஸ்திரேலிய தொடரில் 'டிவி' அம்பயர் தீர்ப்புகள் பல அதிர்ச்சி தருவதாக உள்ளன. பெர்த் டெஸ்டில், ராகுல் பேட்டில் பந்து படாத போதும், அவுட் கொடுத்தார்.

நேற்று இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் இணைந்து போட்டியை 'டிரா' செய்ய போராடினர். இந்த ஜோடியை பிரித்துவிட்டால் போதும், எளிதாக வெல்லலாம் என திட்டமிட்டது ஆஸ்திரேலியா. இந்நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தை, எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், பந்தை விக்கெட் கீப்பரிடம் விட்டுவிட்டார்.

ஆனால் இவரது 'கிளவுசில்' பட்டுச் சென்றதாக அவுட் கேட்டார். அம்பயர் மறுக்க, கம்மின்ஸ் 'ரிவியூ' கேட்டார். 'ரீப்ளேயில்' பந்து பட்டுச் சென்றதற்கான எவ்வித தடயத்தையும் 'ஸ்னிக்கோ மீட்டர்' காட்டவில்லை. எனினும், ஜெய்ஸ்வால் கிளவ்சிற்கு அருகில் வந்த பந்து, பின் லேசாக விலகிச் சென்றது. இதைப் பார்த்து அவுட் என அறிவித்தார் 'டிவி' அம்பயர் சைய்கட் ஷர்புதுல்லா (வங்கதேசம்).

போதிய ஆதாரம் இல்லை என்றால் மைதான அம்பயரின் முடிவை மாற்றக் கூடாது என்ற போதும், 'டிவி' அம்பயர் அவுட் தந்தது சர்ச்சை ஆனது. இதுகுறித்து தனது எதிர்ப்பை தெரிவித்த ஜெய்ஸ்வால், அரைமனதுடன் பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் ரோகித் கூறுகையில்,''அம்பயர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் எனத் தெரியாது. ஜெய்ஸ்வால் விஷயத்தை பொறுத்தவரையில், பந்து கிளவ்சில் பட்டதாக நினைக்கிறேன்,'' என்றார்.



ரோகித், கோலி சறுக்கல்

இந்திய அணி கேப்டன் ரோகித், கோலி என இருவரது தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் உள்ளனர். இவர்களது மோசமான பார்ம் தொடர்கிறது.

* 2024-25ல் ரோகித் விளையாடிய, கடைசி 15 இன்னிங்சில் 10ல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். ஒரு சீசனில் அதிகமுறை ஒற்றை இலக்கில் அவுட்டான வீரர்களில், ரோகித் முதலிடம் பிடித்தார்.

இந்த ஆண்டு களமிறங்கிய 26 இன்னிங்சில் ரோகித்தின் சராசரி 24.76 ரன்னாக உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் 3, 6, 10, 3, 9 என மொத்தம் 31 ரன் தான் (சராசரி 6.2) எடுத்தார்.

* மறுபக்கம் கோலி 2024ல் களமிறங்கிய 19 இன்னிங்சில் 417 ரன் மட்டும் எடுத்தார். இவரது சராசரி 24.52 ஆக குறைந்து விட்டது. ஸ்டம்சை விட்டு விலகிச் செல்லும் பந்துகளில் தொடர்ந்து அவுட்டாகி ஏமாற்றம் தருகிறார். இத்தொடரில் ஒரு சதம் (100) தவிர மற்ற 6 இன்னிங்சில் 5, 7, 11, 3, 36, 5 ரன் தான் அடித்தார் (சராசரி 11.16).

பைனல் செல்ல முடியுமா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை என 3 அணிகள் போட்டியிடுகின்றன.

நேற்று மெல்போர்னில் வென்ற ஆஸ்திரேலியா 61.46 சதவீத புள்ளியுடன் 2வதாக உள்ளது. அடுத்த 3 இடத்தில் இந்தியா (52.78), நியூசிலாந்து (48.21), இலங்கை (45.45) உள்ளன.

* இந்தியா வென்றால்...

சிட்னி டெஸ்டில் (ஜன. 3-7) இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும். தொடர் 2-2 என சமன் ஆகும். பின், 2 போட்டிகள் கொண்ட இலங்கை தொடரில் (ஜன. 29-பிப். 10) ஆஸ்திரேலியா 0-1 என தோற்க வேண்டும் அல்லது தொடர் 0-0 என சமன் ஆக வேண்டும். ஆஸ்திரேலியா (53.51), இலங்கை (48.72) 3, 4வது இடத்துக்கு தள்ளப்படும். இந்தியா (55.26) 2வது இடத்தை உறுதி செய்து, பைனலுக்கு முன்னேறும்.

* 'டிரா' செய்தால்...

சிட்னி டெஸ்ட் 'டிரா' ஆனால், இந்தியா 51.75 புள்ளியுடன், பைனல் வாய்ப்பை இழக்கும். மறுபக்கம் 2-0 என ஆஸ்திரேலியாவை வென்றால், இலங்கை 53.85 புள்ளியுடன் பைனலுக்கு செல்லலாம். தசம புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா (53.51) வெளியேறும்.

* இந்தியா தோற்றால்

சிட்னியில் இந்தியா தோற்றால் பைனல் வாய்ப்பு முடிந்து விடும். மறுபக்கம் ஆஸ்திரேலியா 1-1 என இலங்கை தொடரை சமன் செய்தால் போதும். ஆஸ்திரேலியா (57.02) பைனல் செல்லும். இலங்கை (55.26) வெளியேறும்.

'டாப்-5' அணிகள்

அணி போட்டி வெற்றி தோல்வி 'டிரா' வெற்றி சதவீதம்

தென் ஆப்ரிக்கா 11 7 3 1 66.67

ஆஸ்திரேலியா 16 10 4 2 61.46

இந்தியா 18 9 7 2 52.78

நியூசிலாந்து 14 7 7 0 48.21

இலங்கை 11 5 6 0 45.45

மூன்றாவது வீரர்

மெல்போர்னில் இரு இன்னிங்சிலும் 80 ரன்னுக்கும் மேல் எடுத்த, மூன்றாவது அன்னிய வீரர் ஆனார் இந்தியாவின் ஜெய்ஸ்வால் (82, 84 ரன்). முன்னதாக இங்கிலாந்தின் சட்கிளிப் (176, 127 ரன், 1925), பாகிஸ்தானின் ஹனிப் முகமது (104, 93 ரன், 1964) இதுபோல அசத்தினர்.

*இம்மைதானத்தில் இரு இன்னிங்சிலும் 80 ரன்னுக்கும் மேல் எடுத்த, ஏழாவது வீரர் ஆனார் ஜெய்ஸ்வால்.



1478 ரன்

டெஸ்டில் ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் சேவக்கை (2008ல் 1462) முந்தி, இரண்டாவது இடம் பிடித்தார் ஜெய்ஸ்வால் (1478 ரன்). முதலிடத்தில் சச்சின் (2010ல் 1562) உள்ளார்.

* ஒரு ஆண்டில் அதிக அரைசதம் (டெஸ்டில்) அடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை கவாஸ்கர் (1979ல் 12), சச்சினுடன் (2010ல் 12) பகிர்ந்து கொண்டார் ஜெய்ஸ்வால் (2024ல் 12). சேவக் (2010ல் 13) முதல்வனாக உள்ளார்.

சபாஷ் பும்ரா

ஒரு ஆண்டில் 50 க்கும் மேல் விக்கெட் வீழ்த்தி, சிறந்த சராசரி (14.92) கொண்ட பவுலர்களில் பும்ரா (2024ல் 71 விக்.,) 3வது இடம் பிடித்தார். பாகிஸ்தானின் இம்ரான் கான் (1982ல் 62 விக்., சராசரி 13.29), இங்கிலாந்தின் பார்னெஸ் (1912ல் 61 விக்., 14.14) முதல் இரு இடத்தில் உள்ளனர்.

ஐந்தாவது தோல்வி

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, 2024ல் பங்கேற்ற 8 டெஸ்டில் 5ல் தோற்றது (2 வெற்றி, 1 'டிரா'). இதையடுத்து, ஒரு சீசனில் அதிக டெஸ்டில் தோற்ற இந்திய கேப்டன் வரிசையில் சச்சினுடன் (1999ல் 8ல் 5 தோல்வி, 1 வெற்றி, 2 'டிரா') முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.






      Dinamalar
      Follow us