/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் திணறல் * ஆஸி., அணி முன்னிலை
/
இந்திய பெண்கள் திணறல் * ஆஸி., அணி முன்னிலை
ADDED : ஆக 23, 2024 11:30 PM

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், இந்தியா 'ஏ', ஆஸ்திரேலியா 'ஏ' பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 212 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100/2 ரன் எடுத்திருந்தது. ஸ்வேதா (40), (31) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தேஜல் 32 ரன்னில் அவுட்டானார். ஸ்வேதாவும் (40) நிலைக்கவில்லை. சஜனா 'டக்' அவுட்டாக, ராகவி 16 ரன்னில் கிளம்பினார். பின் வரிசையில் சயாலி (21), கேப்டன் மின்னு மானி (17), மன்னத் (19) சற்று உதவினர். 2 விக்கெட்டுக்கு 101 ரன் என வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்து 83 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவின் கேட் 5 விக்கெட் சாய்த்தார்.
மின்னிய மின்னு
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எம்மா (58) கைகொடுத்தார். ஜார்ஜியா, கேப்டன் சார்லி என இருவரையும் மின்னு மானி 'டக்' அவுட்டாக்கினார். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 164/7 ரன் எடுத்து, 192 ரன் முன்னிலை பெற்றிருந்தது. மின்னு மானி 5 விக்கெட் கைப்பற்றினார்.