/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் தடுமாற்றம் * ஆஸி., அணி ஆதிக்கம்
/
இந்திய பெண்கள் தடுமாற்றம் * ஆஸி., அணி ஆதிக்கம்
ADDED : ஆக 24, 2024 10:58 PM

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், இந்தியா 'ஏ', ஆஸ்திரேலியா 'ஏ' பெண்கள் அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, இந்தியா 184 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 164/7 ரன் எடுத்து, 192 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மில்ஸ் (7), கிரேஸ் (35) அவுட்டாக, மேடி டார்கே சதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 260 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் மின்னு மானி 6 விக்கெட் சாய்த்தார்.
சுபா ஆறுதல்
இரண்டாவது இன்னிங்சில் 289 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்திய அணி. பிரியா (36), ஷ்வேதா (21) நம்பிக்கை தந்தனர். தேஜஸ் (6) கைவிட, சுபா 45 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். மூன்றாவது நாள் முடிவில் இந்திய பெண்கள் அணி 149/6 ரன் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 140 ரன் தேவை என்ற நிலையில், கைவசம் 4 விக்கெட் மட்டும் உள்ளதால் இந்திய பெண்கள் அணி தவிக்கிறது.