/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்தியா
/
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்தியா
ADDED : ஜூன் 21, 2024 10:27 PM

புதுடில்லி: நான்கு போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இந்திய அணி, தென் ஆப்ரிக்க செல்லவுள்ளது.
இந்திய அணி கடந்த 2021-2022ல் தென் ஆப்ரிக்கா சென்றது. இங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றது. அடுத்து 'டி-20' தொடர் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ரத்தாக, இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். இதன் பின் 2023ல் 3 'டி-20', 3 ஒருநாள், 2 டெஸ்டில் பங்கேற்றது.
தற்போது 2022ல் ரத்தான 4 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இந்திய அணி, வரும் நவம்பர் மாதம் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளது. இங்கு டர்பன் (நவ. 8), ஜிகுபெர்ஹா (10), செஞ்சுரியன் (13), ஜோகனஸ்பர்க் (15) என நான்கு மைதானங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
காரணம் ஏன்
பொதுவாக இந்திய அணியின் வருகை என்பது, அனைத்து கிரிக்கெட் போர்டுகளுக்கும் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும். இந்தியா மோதும் ஒரு 'டி-20' போட்டிக்கு நேரடி ஒளிபரப்பு வாயிலாக ரூ. 70 கோடி வரை தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டுக்கு (சி.எஸ்.ஏ.,) வருமானம் கிடைக்கும். கடந்த ஆண்டு சி.எஸ்.ஏ.,க்கு ரூ. 55 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதைச் சரிக்கட்ட இந்தியா அங்கு செல்ல உள்ளது.