/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் வெற்றி * தென் ஆப்ரிக்க தொடர் சமன்
/
இந்திய பெண்கள் வெற்றி * தென் ஆப்ரிக்க தொடர் சமன்
ADDED : ஜூலை 09, 2024 10:05 PM

சென்னை: ஸ்மிருதி மந்தனா அரைசதம் கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை சாய்த்தது.
இந்தியா வந்த தென் ஆப்ரிக்க பெண்கள் அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மூன்றாவது, கடைசி போட்டி நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பீல்டிங் தேர்வு செய்தார்.
பூஜா 'நான்கு'
தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா (9), காப் (10), பிரிட்ஸ் (20) விரைவில் வெளியேற, 10 ஓவரில் 57/3 ரன் மட்டும் எடுத்தது.
போட்டியின் 11 வது ஓவரை வீசிய பூஜா, மீண்டும் அசத்தினார். இம்முறை 2வது பந்தில் அன்னெகே (17), 5வது பந்தில் நாடினை (0) அவுட்டாக்கி, கைகொடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 17.1 ஓவரில் 84 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பூஜா 4, ராதா 3 விக்கெட் சாய்த்தனர்.
மந்தனா கலக்கல்
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்திய அணி, 10.5 ஓவரில் 88/0 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. பவுண்டரி மழை பொழிந்த மந்தனா (54 ரன், 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஷபாலி (27) அவுட்டாகாமல் இருந்தனர். ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.