/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாதிக்குமா இளமை பட்டாளம் * இந்தியா- ஜிம்பாப்வே தொடர் துவக்கம்
/
சாதிக்குமா இளமை பட்டாளம் * இந்தியா- ஜிம்பாப்வே தொடர் துவக்கம்
சாதிக்குமா இளமை பட்டாளம் * இந்தியா- ஜிம்பாப்வே தொடர் துவக்கம்
சாதிக்குமா இளமை பட்டாளம் * இந்தியா- ஜிம்பாப்வே தொடர் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2024 10:03 PM

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 'டி-20' தொடர் இன்று துவங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சாதிக்க காத்திருக்கின்றனர்.
ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் அனைத்தும் ஹராரேயில் நடக்கும். இந்திய அணி 'டி-20' உலக சாம்பியன் ஆன நிலையில் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில், கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா என மூன்று வீரர்கள் ஓய்வு பெற்றனர்.
தவிர சூர்யகுமார், பாண்ட்யா, ரிஷாப் பன்ட் உள்ளிட்டோர், வெற்றிக் கொண்டாட்டத்திற்காக தாயகம் திரும்பினர். இதனால் சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி, இத்தொடரில் களமிறங்குகிறது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மூன்றாவது போட்டியில் இருந்து களமிறங்க உள்ளனர்.
இதனால் இன்றைய போட்டியில் ஐ.பி.எல்., தொடரில் அசத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக் அறிமுக வாய்ப்பு பெறவுள்ளனர்.
பேட்டிங்கில் சுப்மன் கில்லுடன், இவரது நெருங்கிய நண்பர் அபிஷேக் சர்மா துவக்கம் தரலாம். இல்லை எனில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று தந்த ருதுராஜ் துவக்க வீரராக வரலாம்.
'மிடில் ஆர்டரில்' ரியான் பராக், அடுத்து 5, 6வது இடத்தில் ரிங்கு சிங், துருவ் ஜோரல் அல்லது ஜிதேஷ் சர்மா களமிறங்கலாம். பவுலிங்கில் அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார் 'வேகத்தில்' கைகொடுப்பர். சுழலில் ரவி பிஷ்னோய், ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உதவ காத்திருக்கின்றனர்.
ஜிம்பாப்வே அணி சிக்கந்தர் ராஜா தலைமையில் களமிறங்குகிறது. 'டி-20' என்பதால் மசகட்சா, சட்டாரா, மருமானி, மில்டன் ஷும்பா உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம்.
அட்டவணை
தேதி போட்டி
இன்று முதல் 'டி-20'
ஜூலை 7 2வது 'டி-20'
ஜூலை 10 3வது 'டி-20'
ஜூலை 13 4வது 'டி-20'
ஜூலை 14 5வது 'டி-20'
* போட்டி அனைத்தும் ஹராரேயில் நடக்கும். இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கும்.