/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணியின் அதிர்ஷ்டம் * மார்னே மார்கல் மகிழ்ச்சி
/
இந்திய அணியின் அதிர்ஷ்டம் * மார்னே மார்கல் மகிழ்ச்சி
இந்திய அணியின் அதிர்ஷ்டம் * மார்னே மார்கல் மகிழ்ச்சி
இந்திய அணியின் அதிர்ஷ்டம் * மார்னே மார்கல் மகிழ்ச்சி
ADDED : செப் 14, 2024 11:50 PM

சென்னை: ''இந்திய அணியில் திறமையான சீனியர் வீரர்கள் இருப்பது அதிர்ஷ்டம்,'' என மார்னே மார்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரவுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ல் துவங்குகிறது. இதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொடரில் இந்திய அணிக்கு புதிய பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் 39, செயல்பட உள்ளார். இந்திய அணி குறித்து அவர் கூறியது:
இந்திய அணி 'செட் அப்' என்பது தானாகவே சிறப்பாக இயங்கக் கூடியது. இதை அப்படியே முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, தற்போதுள்ள அமைப்பை பாதுகாப்பது, சிறிய வழிகளில் மேம்படுத்துவது மட்டுமே எனது இலக்கு.
தவிர இந்திய அணியில் திறமையான சீனியர் வீரர்கள் பலர் (ரோகித், கோலி, அஷ்வின், பும்ரா உள்ளிட்டோர்) உள்ளது, நமது அதிர்ஷ்டம். ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்கின்றனர். இவர்களுக்கு ஆதரவு கொடுப்பது எனது பொறுப்பு.
தற்போதுள்ள வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஐ.பி.எல்., தொடரில் இந்திய வீரர்கள் விளையாடியதை பார்த்துள்ளேன், அவர்களுடன் பழகியுள்ளேன். தற்போது அவர்களுடன் நட்பை வளர்க்க வேண்டும். வீரர்கள் பலம், பலவீனம் அறிந்து, அதற்கேற்ப உதவி செய்து, வரும் தொடர்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோசை பிரியர்
மார்னே மார்கல் கூறுகையில்,'' தோசை, பூரி, மலாய் சிக்கன் உள்ளிட்ட இந்திய உணவுகள் பிடிக்கும்,'' என்றார்.